*பத்து நாள் விமர்சனம்!*
இந்த தலைப்பு அறிவிக்கப்பட்டவுடன் மனிதனுக்கு ஆலோசனை சொல்லப்போகும் தலைப்பு போல இருக்கிறதே! இதில் என்ன மார்க்கம் தொடர்பாக வந்துவிடப் போகின்றது என பலரும் நினைத்தார்கள். மாஷா அல்லாஹ்! சகோதரர் பீ.ஜைனுல் ஆபிதீன் எடுத்து வைக்கும் ஒவ்வொரு வாதங்களும் நம்மிடம் காணக்கூடிய ஒவ்வொரு தீய குணங்களை ஒவ்வொன்றாய்ச் சுட்டிக்காட்டி நம்மிடம் இருக்கும் தீய குணம் நபிகளாரிடம் இல்லை, நம்மிடம் இருக்கும் தீய செயல் நபிகளாரிடம் இல்லை என ஒவ்வொன்றாகப் பட்டியல் போட்டு அந்த தீய செயலை செய்தால் நீ நபிகளாரைப் பின்பற்றக் கூடியவன் இல்லை என்று மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறார்.
• அனைவருக்குமே ஆச்சரியம்! என்ன இது நாம் எதிர்பார்த்த தலைப்பு பொதுவாழ்க்கை பற்றி பொதுவாக சொல்வார் என்று நினைத்தால் அனைத்துமே மார்க்கத்தின் ஊடே பிண்ணிப் பினைந்து பிரமாதமான ஒரு விருந்தினைப் படைத்து வருகின்றது தீய குணங்களும் தீர்க்கும் வழிகளும்.
• அபூதர் கிஃபாரி (ரலி) அவர்கள் ஒருமுறை தன்னுடைய அடிமையுடன் நடந்து வருகின்றார். இருவரும் ஒரேமாதிரி ஆடை அணிந்து இருப்பதைப் பார்த்த மக்கள் கேட்கின்றார்கள். அதற்கு அபூதர் சொல்கின்றார் உங்களின் அடிமைகள் உங்களுக்குச் சகோதரர்கள் என நபிகளார் சொன்னார்கள் என்ற வரலாற்றுச் சம்பவம் இன பேதத்தையும் யாருக்கும் யாரும் அடிமை இல்லை என்ற வாதத்தையும் அழுத்தமாக இந்த தொடரின் மூலம் பதிவு செய்தது, தீய குணங்களும் தீர்க்கும் வழிகளும்.
• பெருமை என்பது காசு பணத்தில் அல்ல! பெருமை என்பது உடல் ஆரோக்கியத்தில் தான். காசு பணம் இருந்தால் பகட்டான ஆடை அணியலாம், பகட்டான காரில் பயணம் செய்யலாம். ஆனால் விதவிதமாக சாப்பிட முடியாது. அதுபோல காசு பணம் இல்லாதவனுடைய உடல் ஆரோக்கியமாக இருக்கிறது, பணம் காசு நிறைந்திருப்பவர் நோயாளியாக இருக்கிறார். ஆக பெருமை என்பது உடல் நலத்தில் மட்டும் தான் உடல் ஆரோக்கியத்தில் மட்டும் தானே தவிர பணத்தால் அல்ல!
• செய்யும் தொழிலில் கேவலமானது என்று எதுவுமே இல்லை, பிச்சையெடுத்தலைத் தவிர. நபிகள் நாயகம் கூட ஆடு மேய்த்தவர் தான். நூஹ் நபி கூட தச்சுத் தொழில் செய்தவர்கள் தான். ஆக இழிதொழில் என்று உலகத்தில் எதுவுமே கிடையாது, பிச்சையெடுத்தலைத் தவிர.
• ஏழைகளை உதாசீனப்படுத்துகிறீர்கள் நீங்கள். ஆனால் நீங்கள் உயிரினும் மேலாக மதிக்கக் கூடிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மட்டும் தான் உலகத்திலே இனி பிறக்க முடியாத ஏழை!. காரணம் மூன்று பிறை வந்தும் கூட அடுப்பு மூட்டுவதற்கு வசதியில்லாத ஏழை நபிகளார். சாப்பிட எதுவும் இல்லை என்பதற்காக நான் இன்று நோன்பாய் இருந்து கொள்கிறேன் என்று இருந்தவர் நபிகளார். அவரை விட ஏழை இன்றுவரை இல்லவே இல்லை. ஆக ஏழையை நீங்கள் இழிவாகப் பார்த்தால் அந்த இழிவை சுமந்து வாழ்ந்த நபிகளாரை இழிவாகப் பார்ப்பதற்கு சமம்.
• குலப் பெருமையை அறவே ஒழித்தார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். நபிகளார் தன் வளப்பு மகனாக தத்தெடுத்து வளர்த்த ஜைது(ரலி) ஒரு அடிமையாக இருந்தவர்தான். ஜைதுடைய மகன் ஒசாமா(ரலி) நபிகளாரின் அன்புக்குரியவராக இருந்தார். ஆனால் அவர் அடிமை இனத்தைச் சேர்ந்தவர். அந்த ஒசாமை உயர்ந்த குலத்தைச் சேர்ந்த அபூபக்ர்(ரலி), உமர் (ரலி) அவர்களுக்கு படைத்தளபதியாக நியமித்து அனுப்பி வைப்பார்கள். இதன்மூலம் இன பேதத்தை ஒழித்தார்கள் நபிகளார்.
• ஒரு விருந்து நடக்கும் போது அங்கே ஒரு அழுக்குச் சட்டையுடன் ஒருவர் வந்தால் அவரை விரட்டி அடிக்கிறது இந்த சமூகம். அவரை இழிந்த குலமாகப் பார்க்கிறது. ஆனால் நீங்களெல்லாம் ரலியல்லாஹூ அன்கு என்று சொல்லும் பிலால் அவர்கள் ஒரு கருப்பின தாழ்ந்த குலத்தைச் சேர்ந்த அடிமையே!
• மொழி வெறியை ஒழித்ததும் இஸ்லாம் தான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி என்று பெருமை அடிக்கின்றான். மொழி என்பது மனிதர்கள் பேசக்கூடியது தான். ஆனால் கல்லும் மண்ணும் தோன்றாத காலத்தில் ஒரு மொழி தோன்றியது என்று சொல்வது கட்டுக்கதை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அடுத்து எந்த ஒரு மொழியும் எந்த ஒரு மொழியையும் விட உயர்ந்ததும் அல்ல! சிறந்ததும் அல்ல என மொழி வெறியை உடைத்து எறிந்தது இந்த நிகழ்ச்சி
• தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிகழ்ச்சிகளை உளவுத்துறையினர் பார்த்திருப்பார்கள். அவர்கள் மேலிடத்துக்கு எப்படி ரிப்போர்ட் கொடுக்கப் போகிறார்கள்? பீ.ஜைனுலாபீதீன் பேசுகிறார். முஸ்லிம்கள் பின்பற்றும் நபிகள் நாயகம் சொன்னதாக ஒவ்வொன்றையும் புட்டுப் புட்டு வைக்கிறார். இனவெறி இல்லை என்கின்றார், மொழி வெறி இல்லை என்கின்றார், ஜாதி வெறி இல்லை என்கின்றார். ஏழைகளை அரவணைக்கச் சொல்கிறார், அடிமைகள் என்று யாரும் இல்லை என்று சொல்கின்றார், தொழிலை வைத்து யாருக்கும் உயர்வு தாழ்வு இல்லை என்று சொல்கிறார். ஆக சகோதரத்துவத்தையும் சமாதானத்தையும் முழுக்க முழுக்க இனக்கத்தையும் பேன வேண்டும் என்று தான் தன்னுடைய உரையில் தெரிவிக்கிறார் என்று ரிப்போர்ட் கொடுப்பதைத் தவிர வேறு எப்படியும் கொடுத்து விட முடியாது.
• ஒவ்வொரு சம்பவத்திற்கும் சரியான ஆதாரங்களையும் திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ் எண்களையும் கொடுத்து சொல்லப்படும் நிகழ்ச்சி இது தான் இது மட்டும் தான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
• அறிவுறை சொல்லும் போது கூட திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் மக்களை செதுக்கும் ஒரே ஜமாஅத் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் என்பதில் பெருமிதம் கொள்ள வேண்டும். இன்னமும் கட்டுக்கதைகளையும் புளுகு மூட்டைகளையும் மார்க்கமாகப் பேசித்திரியும் புண்ணாக்கு வியாபாரிகளுக்கு மத்தியில் சகோ.பீஜே மிளிரக் கூடிய வைரம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!
-இன்ஷா அல்லாஹ் விமர்சனம் தொடரும்…..
*அஹ்மத் கபீர்*
No comments:
Post a Comment