Sunday, 26 June 2016

அவதூறு பரப்பினால் ஓர் இறைக்கொள்கை சுடர் விட்டு எரியும்....!!

தமிழகத்தில் தவ்ஹீத் பிரச்சாரம் தொடங்கப்பட்டு 30 ஆண்டுகால வரலாற்றில் மௌலவி பீஜே அவர்கள் மிக கடுமையான விமர்சனங்களுக்கும், தாக்குதல்களுக்கும் உள்ளானதைப்போல் கடந்த 10 ஆண்டுகளாக செய்யது இப்ராஹீம் அவர்கள் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறார்கள்.

அதற்கு அடிப்படை காரணம் என்னவென்றால்...

தினம் ஒரு தகவல் மூலமாக மார்க்க பிரச்சாரம் மட்டுமின்றி சமூக ரீதியிலான பொய் பிரச்சாரங்களுக்கு தகுந்த பதிலடியை தமக்கே உரிய பாணியில் நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல் பதில் கொடுப்பதால் குலைநடுங்கும் எதிரிகளால் சமூக வலைதளங்களில் போலி கணக்குகளில் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.

உதாரணத்திற்கு சொல்லவேண்டுமென்றால் மதீனாவிலுள்ள மஸ்ஜிதுந் நபவி பள்ளியில் மார்க்கத்திற்கு முரணான வகையில் கட்டப்பட்ட பச்சை டூமை அகற்ற வேண்டும் என்று கூறினார்.

செய்யது இப்ராஹீம் மதீனாவையே இடிக்க சொன்னதுபோல் முகநூலில் தவ்ஹீத் ஜமாஅத்தின் எதிரிகளால் பொய் பிரச்சாரம் செய்யப்பட்டு சுயநலவாதிகளால் போராட்டம் நடத்தப்பட்டு செய்யது இப்ராஹீம் நாக்கை வெட்டுவோம், கையை வெட்டுவோம், கழுத்தை வெட்டுவோம் என்று குரைத்தனர்.

அப்போராட்டமே வரலாற்றில் முத்திரை பதித்த ஷிர்க் ஒழிப்பு மாநாடு நடத்த அடிப்படை காரணமாக அமைந்தது.

இப்படி செய்யது இப்ராஹீம் எதை பேசினாலும் அதை சர்ச்சைக்குரியதாக ஆக்கிவிட்டு செய்யது இப்ராஹீமுக்காக லட்சக்கணக்கான தவ்ஹீத்வாதிகள் ஆதரவுக்கரம் நீட்டி ஷிர்க் ஒழிப்பு மாநாட்டின் புயல் ஓய்ந்துள்ள சூழலில்....

செய்யது இப்ராஹீமுக்கு எதிராக அடுத்த புயலை உருவாக்க முயன்று வருகின்றனர் முகநூல் கீபோர்ட் புலிகள்.

அப்படி என்ன சொன்னார் செய்யது இப்ராஹீம் ?

செய்யது இப்ராஹீம் பிர்அவ்ன் சம்பந்தமாக சொல்லும்போது எகிப்தில் பாதுகாக்கப்பட்டு வரும் உடல் பிர்அவ்னின் உடல் அல்ல என்று கூறினார்.

இந்த வார்த்தையை சொன்னதற்கு அவர் குர்ஆனையே பொய் என்று சொல்வதுபோல் அவதூறுகளை பரப்ப தொடங்கி விட்டனர்.

எகிப்தில் இந்த உடலை மட்டும் பாதுகாக்கவில்லை, எண்ணற்ற உடல்களை பாதுகாத்து வருகின்றனர், இது எகிப்தியர்களின் பண்டையகால வரலாற்று நடைமுறையாகும்.

இவ்வாறு பல்வேறு உடல்கள் பாதுகாக்கப்படுவதால் ஆளாளுக்கு இதுதான் பிர்அவ்ன், அதுதான் பிர்அவ்ன் என்று பரப்ப முடியும்,

குர்ஆனில் பிர்அவ்ன் சம்பந்தமாக அல்லாஹ் கூறுவதை சரியாக விளங்கினால் தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.

உனக்குப் பின் வருவோருக்கு நீ சான்றாக இருப்பதற்காக உன்னை உன் உடலுடன் இன்று பாதுகாப்போம். (என்று கூறினோம்) மனிதர்களில் அதிகமானோர் நமது சான்றுகளை அலட்சியம் செய்வோராகவே உள்ளனர்.

(திருக்குர்ஆன் 10:92)

இந்த குர்ஆன் வசனத்தில் உன்னை உன் உடலுடன் இன்று பாதுகாப்போம் என்ற சொல்லுக்கு...

இறந்து போன உடலை பாதுகாப்போம் என்று அர்த்தமல்ல, அனைவரும் கடலில் மூழ்கடிக்கப்பட்டனர். உன்னை உயிருடன் கடலிலிருந்து மீட்போம் என்ற பொருளே அடங்கியுள்ளது.

அந்த வகையில் அன்றைய தினம் அனைவரும் கடலில் மூழ்கடிக்கப்பட்டவுடன் பிர்அவ்னை மட்டும் அல்லாஹ் காப்பாற்றி உயிருடன் கரை ஒதுக்கி தன்னை கடவுள் என்று கூறிய பிர்அவ்னை நிர்கதியாக நிற்க விட்டு நீ கடவுள் இல்லை, நீ சாதாரண மனிதன் என்பதை பிர்அவ்னுக்கு உணர்த்தும் விதமாகவும், அன்றைய மக்களுக்கு சான்றாகவும் ஆக்கியுள்ளதை புரிந்து கொள்ள முடிகிறது.

இதை தான் செய்யது இப்ராஹீம் கூறினார்.

பிர்அவ்ன் சம்பந்தமாக மௌலவி பீஜே அவர்கள் கொடுத்துள்ள முழுமையான விளக்கத்தினை கமெண்ட் பகுதியில் இணைக்கிறோம் பாருங்கள்...

செய்யது இப்ராஹீம் சொன்னது சம்பந்தமாக தெளிவாக புரிந்து கொள்ள முயலாமல் ஏதோ அவரை இழிவுப்படுத்த வாய்ப்பு கிடைத்ததுபோல் முகநூல் கீ போர்ட் புலிகள் தயாராகியுள்ளனர்.

30 ஆண்டுகால வரலாற்றில் ஆயிரக்கணக்கான அவதூறுகளால் அசைக்க முடியாத ஏகத்துவ ஆல விருட்சத்தை போலி முகநூல் கீ போர்ட் புலிகள் அசைத்து விட போகிறார்களா ? ஓர் இறைக்கொள்கை இன்னும் சுடர் விட்டு எரிய வாய்ப்பாகவே அமையும்.

ஷிர்க் ஒழிப்பு மாநாடு என்ற ஏகத்துவ புயல் தமிழகத்தை 6 மாதத்திற்கு மையம் கொண்டது போல் அடுத்த புயல் புறப்படுகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ISIS தீவிரவாத அமைப்பின் தலைவன் பெயர் சித்தார்த் ! அம்பலப்படுத்திய உலக ஊடகங்கள் !


அதிர வைக்ககும் உண்மைகள் !

ஈராக்கிலுள்ள மசூல் நகரத்தின் ஐஎஸ்ஐஎஸ் தலைவன் பெயர் என்ன தெரியுமா? இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சித்தார்தா! அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் என்ன தொடர்பு? சித்தார்த்தா சில வருடங்கள் முன்பு இஸ்லாத்தை ஏற்று தனது பெயரை அபு ருமைஷா என்று மாற்றிக் கொண்டார்.

இஸ்லாத்தை ஏற்ற ஒருவன் என்னசெய்ய வேண்டும்? தொழுகை, நோன்பு, மனித நேயம், ஏழைகளின் பால் அன்பு, ஹராம் ஹலால் பார்த்து சம்பாதிப்பது என்று அவனது வாழ்க்கை அமைய வேண்டும். ஆனால் இவனோ தீவிரவாதத்தை கையிலெடுத்து ஐஎஸ்ஐஎஸில் சேர்ந்து இஸ்லாத்துக்கு விரோதமான செயலில் ஈடுபடுகிறான். இங்கிலாந்தில் பல முறை சிறையிலடைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளான்.

ஐரோப்பா அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள படித்த இளைஞர்களை யூதர்கள் வலை விரித்து தங்கள் காரியத்தை சாதித்துக் கொள்ள பயன்படுத்திக் கொள்கிறார்கள். பல பரம்பரைகளாக இஸ்லாத்தில் உள்ள ஒருவன் யூதர்களின் பாவச் செயலுக்கு அடி பணிய மாட்டான். எனவே பாசிச சிந்தனையுடைய சித்தார்த் போன்ற இளைஞர்களை பிடித்து மூளை சலவை செய்கின்றனர். அவர்களை இஸ்லாத்தை ஏற்பதாக நடிக்க வைத்து தங்கள் காரியத்தை சாதித்துக் கொள்கின்றனர்.

பாகிஸ்தானில் பள்ளிக் குழந்தைகளை கொன்றவர்கள் பெரும்பாலும் ஐரோப்பியர்கள். அவர்கள் உடலில் பச்சை குத்தியிருந்ததை முன்பு ஆதாரங்களோடு பார்த்தோம். ஃப்ரான்ஸில் நடந்த பல குண்டு வெடிப்புகள் இன்று வரை மர்மாகவே உள்ளன. அங்கும் யூதர்கள் சம்பந்தப்பட்டுள்ளது முடிவில் தெரிய வந்தது. இதனை கண்டு பிடித்த விசாரணை அதிகாரியை கொன்று விட்டு அதனை தற்கொலையாக உலகுக்கு சொன்னதை நாம் மறந்து விட முடியாது.

நம் நாட்டில் மாலேகானில் நடந்த குண்டு வெடிப்புகளில் முதலில் இஸ்லாமியர்கள்தான் கைது செய்யப்பட்டனர். முடிவில் ஹேமந்த் கர்கரே என்ற நியாயவான் உண்மையை வெளிக் கொண்டு வந்தார். இன்று இந்துத்வாவாதிகள் சிறையில் உள்ளனர். யூதர்களுக்கும் நம் நாட்டு இந்துத்வாவாதிகளுக்கும் எப்போதும் ஒரு நெருக்கம் இருப்பதை நாம் அறிவோம்.

ஐஎஸ்ஐஎஸ் செய்து வரும் காரியம் எல்லாம் இஸ்லாம் தடுத்தது. பெண்களை செக்ஸ் தொழிலாளிகளாக பயன்படுத்துகின்றனர். பத்திரிக்கையாளர்களை கழுத்தை வெட்டி அதனை வீடியோவாக்கி வெளியிடுகின்றனர். அப்பாவி மக்களை கொல்கின்றனர். சிரியா, ஈராக்குக்கு சொந்தமான எண்ணெய் வயல்களை திருடி விற்று காசு பார்க்கின்றனர்.

இவை அனைத்தும் இஸ்லாம் தடுத்த செயல்கள். இவற்றை செய்வதன் மூலம் யூதர்களுக்கு பணமும் கிடைக்கிறது. அதே நேரம் உலக அளவில் இஸ்லாத்திற்கு கெட்ட பெயரும் ஏற்படுத்தப் படுகிறது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கிறார்களாம். ஆனால் இவர்களின் சூழ்ச்சியை உலகம் தற்போது நன்றாக புரிந்து கொண்டு விட்டது. முன்பை விட ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இஸ்லாம் வேகமாக பரவுகிறது. இன்னும் சில ஆண்டுகளில் யூதர்களின் ஆட்டத்தை இறைவன் ஒரு முடிவுக்கு கொண்டு வருவான்.

தகவல் உதவி
தி ஹிந்து ஆங்கில நாளிதழ்

http://www.thehindu.com/…/siddhartha-dha…/article8548219.ece

BBC NEWS

http://www.bbc.com/news/uk-35225636

படித்த சகோதரர்கள் தவறாமல் இச்செய்தியை பகிருங்கள்

தொழுகை_அல்லாஹ்_அருளிய_அழகிய_யோகா

#

முஸ்லிம்கள் ஒரு நாளைக்கு ஐந்து தடவை என இறைவனை துதிக்கும் தொழுகை முறையே ஒரு அழகிய யோகா....

தன்னிலை மறக்கும் தியானமும்... தெம்பூட்டும் மூச்சுப் பயிற்சியும்... திடன் வளர்க்கும் ஆசனங்களும்... தன்னுள்ளடக்கியது தான் யோகா?

‘வணக்கத்தை அல்லாஹ்வுக்கே உரித்தானவர்களாக அவனையே வணங்க வேண்டும் என்றே அவர்கள் ஏவப்பட்டுள்ளார்கள்’ . (அல்-குர்ஆன் 98:5)

இறைமறையின் வசனங்களை... இறைத்தூதர் கற்றுத் தந்த படி... முழுமையான தஜ்வீதுடன்... இனிமையாய் ஓதும் போது... மூச்சுப் பயிற்சிக் கிடைக்கிறது.

நின்று... குனிந்து... நின்று... மண்டியிட்டு...இருந்து...மண்டியிட்டு எழுந்து நிற்கும் போது... ரகாஅத் ஒன்று ஆகிறது, நாளொன்றுக்கு ஐந்து நேரம், பதினேழு தடவைச் செய்ய, நல்ல உடற்பயிற்ச்சியும் தான் கிடைக்கிறது.பின்னர், உமக்கும் எமக்குமான வித்தியாசமே... இந்த தொழுகை தான்.

உமது யோகாவோ... உலகம் துறந்த சித்தர்களுக்கானது. எமது தொழுகையோ... உலகைச் சார்ந்து வாழும் மனிதர்களுக்கானது...ஆனால் யோகாவை விட தொழுகையே சிறந்தது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

யோகா ஏன் மெதுவாகவும், பொருமையாகவும் செய்ய வேண்டும் ? இது போன்று தானே நம் தொழுகையையும் நம் உலக லாபங்களுக்காக அவசர அவசரமாக முடிக்கிறோம் ?

திருடர்களில் மிகவும் மோசமான திருடன் தொழுகையில் திருடுபவன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய போது அல்லாஹ்வின் தூதரே! தொழுகையில் எப்படி ஒருவன் திருடுவான்? என நபித்தோழர்கள் கேட்டனர். தனது ருகூவையும், சுஜூதையும் பூரணமாகச் செய்யாதவனே அந்தத் திருடன் என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
அபூகதாதா (ரலி)நூல்: அஹ்மத் 11106

தமது தொழுகையில் கவனமற்று தொழுவோருக்கு கேடுதான்.(அல்குர்ஆன் :107-4)

தொழுகை முறையை தொடர்ந்து ஒருவர் மன ஓர்மையுடன் தொழுது வந்தால் அவருக்கு யோகா பயிற்சியே தேவையில்லை.

முஸ்லிம்கள் தொழுகை முறை சிறந்த யோகா இதனை இறைவனுக்காக முழுமையாகவும் , நேர்த்தியாகவும் கடைப்பிடிக்கும் போது மிகச்சிறந்த யோகா கலையாகவும் பயனளிக்கும்.யோகா கலையின் அனைத்து அம்சங்களும் தொழுகையில் அமைந்திருக்கிறது.

1.நம் தொழுகைக்காக #தக்பீர் கட்டி நிற்பதும் , #ருகூ செய்வதும் மாற்று மதத்தவர்களால் சூரிய நமஸ்காரம் என்று சொல்லப்படும் ஆசனத்தின் ஒரு பகுதியாகும் .

சூரிய நமஸ்காரத்தில் மொத்தம் 10 நிலைகள் உள்ளன.

தொழுகைக்காக நாம் முதலில் அல்லாஹ் அக்பர் என தக்பீர் கட்டவதும் கூட மன ஒர் நிலைப்பாட்டை அடைய அதுவும் ஒரு யோகாதான்

#நன்மைகள்  ● நரம்புகள் வலிமை பெறுகின்றன.
● இரத்த ஓட்டம் சீராக நடைபெறும்.
●தசை நார்கள் உறுதி பெறும்.
.
2. சாசங்காசனம்
● வயிறு நோய்கள் , நரம்புகள் பலம் பெறும் , ஆண்மை அதிகரிக்கும்.
.
3. வஜ்ராசனம்
● அதிக இரத்த அழுத்தம் , இடுப்பு வாயு பிடிப்பு , குடல் கோளாறு நீங்கும்.
.
4. சுஹாசனம்  --> இது நம் தொழுகை முடித்த பின் அமர்ந்து துவா செய்யும் முறையாகும்.
● அதிக நேரம் அமர்ந்திருப்பதால் உடலில் சக்தி சமமாக பரவும்.
.
சிந்தியுங்கள் செயல்படுங்கள்
திருக்குர்ஆனில் அறிவியல்
மறுமை நாளை நோக்கி....

நன்றி திருக்குர்ஆனில் அறிவியல் சான்றுகள்...

Saturday, 18 June 2016

பயங்கவாதிகளின்_பயங்கரசதித்திட்டம். பிஜேபி_தேசிய_செயற்குழுக்கூட்டம்

#பயங்கவாதிகளின்_பயங்கரசதித்திட்டம்
#பிஜேபி_தேசிய_செயற்குழுக்கூட்டம்

பிஜேபி செல்வாக்கில்லாத 5மாநிலத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

4மாநிலங்களில் படுதோல்வி ஒரு மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்றிய தென்றாலும் 5மாநிலங்களில் பிஜேபியின் வாக்குவங்கி அச்சுறுத்தும் வகையில்கூடியுள்ளது என்பதே உண்மை

அடுத்து வரும் ஓராண்டுக்குள் 5மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெறவிருக்கிறது

பஞ்சாப்,குஜராத், இமாச்சல் பிரதேசம், உத்திரப்பிரதேசம்,உத்தர்காண்ட்

இதில் பஞ்சாபில் வாடிக்கையாக கூட்டணி ஆட்சி, மற்ற மாநிலங்களில் பிஜேபி வெற்றி பெறும்.
உத்தரப்பிரதேசத்தைகைப்பற்றுவதுதான் பிஜேபியின் முக்கிய அஜென்டா.

மோடிக்கு தொங்குபாராளுமன்றம் அமையும் நிலையை மாற்றி 73MP சீட்டைக் கொடுத்து உத்தரப்பிரதேசம்.

காரணம், அங்கு குஜராத்துக்குள் நுழையக் கூடாதென விரட்டப்பட்ட அமித்ஷா தலைமையில் திட்டமிட்டு நடத்தப்பட்ட முசாபர்நகர் மதக்கலவரம்..

இந்தியாவில் பெரியமாநிலம் 80MP, 400கும் மேற்பட்ட MLA தொகுதிகள். இதைக் கைப்பற்றினால் ஒரு 15வருடத்துக்கு இந்தியாவை நிரந்தரமாக பிஜேபி ஆளலாம். பிராந்திய கட்சிகளை ஒழித்துக்கட்டலாம். ராஜ்யசபாவுக்கு தேவைப்படும் MPகள் கிடைக்கும்.

இதற்கு என்ன செய்ய வேண்டும்?
சமாஜ்வாதி,பகுஜன் சமாஜ்வாதி, ஜனதா தள செல்வாக்கு உள்ள உத்திரப் பிரதேசத்தில் தலித்துகள், முஸ்லீம்கள் வாக்குவங்கிதான் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கின்றன.

எனவே பிஜேபி கால்பதிக்க வேண்டுமென்றால் மீண்டுமொரு முசாபர்நகர் கலவரத்தைத் தொடங்க வேண்டும். தலித்துகளை கையில்  வளைத்தெடுக்க வேண்டும்.

கலவரம் முசாபர்நகரில்தான் நடத்த வேண்டுமென்பதில்லை. அங்கிருந்து 70கிமீ அப்பாலிருக்கும் கைரானா நகரை மையப்படுத்திக்கூட நடத்தப்படலாம்.

"முஸ்லீம் 85% உள்ள கைரானாவில் அவர்களின் அச்சுறுத்தல் காரணமாக 346 இந்துக்குடும்பங்கள் ஊரைவிட்டு சென்று விட்டனர்.இந்துக்கள் அங்கு வியாபாரம்  செய்ய,நிலம்வாங்க, வாழ முடியாத பயங்கரசூழல் நிலவுகிறது" 

இந்தப் பிரச்சனைதான் பிஜேபியின் முக்கியப் பிரச்சனை. இந்தப் பகுதிக்கு பிஜேபி ஒரு குழுவை அனுப்பி வைக்குமென பிஜேபி செயற்குழு அறிவித்துள்ளது.

அதாவது, தேர்தலை முன்னிட்டு கலவரத்துக்கு அச்சாரம் போடப்பட்டு விட்டது. இதற்கானத் தொடக்க விழாவை அமித்ஷா தலித் வீட்டில் உணவருந்தி தொடங்கி வைத்தார்.

கனன்று கொண்டிருக்கும் முசாபர்நகரில் மீண்டும் கலவரத்தைத் தொடங்க சதி வேலைகள் தொடங்கப் பட்டுவிட்டன 1மாதம் முன்பு 2கொலைகள் நடந்தன.
அதைவைத்து பிஜேபி பிரச்சனையைக் கிளப்பிப் பார்த்தது.  ஏனோ அது பற்றி எரியவில்லை.

கலவரத்தின் மையம் கைரானாவா? முசாபர்நகரா என்பது விரைவில் தெரிந்துவிடும்.

தலித் ஓட்டுவங்கியைக் கவர உபியில் எல்லா பிஜேபி தலைவர்களும் தலித் வீடுகளில் உணவருந்தும்படி உத்தரவிட்டுள்ளார்.

(கலவரம் செய்வது, கலவரத்தில் முஸ்லீமை எரித்துக் கொள்வதைவிட 'கஷ்டமான' காரியமாச்சே ..பல்லைக் கடித்துக் கொண்டு எப்படி தலித் வீடுகளுக்கு போவார்கள் என்பதை விரைவில் பார்க்கலாம்.

அல்லது அமித்ஷா போல 5ஸ்டார் விடுதியிலிருந்து உணவை வரவழைத்து தலித் வீட்டில் உண்ணக்கூடும்.)

இதெல்லாம் காந்தி,லாலு,MGR, ராகுல், வகையறாக்கள் காலம்காலமாக நடத்தும் எளிமை,கவர்ச்சிவாத நாடகங்கள்தான்.

சிங்,ஜாட்,தாக்கூர்,யாதவ ஜாதியினர் மத்தியில் 'இந்து வாக்குவங்கி'யை உருவாக்குவதில் வெற்றி பெற்றுவிட்டனர். அந்த இந்து வாக்கு வங்கிக்குள் தலித்துகளை இழுத்துப் போடும் வேலையைத்தான் நாடெங்கும்
பிஜேபி செய்து வருகிறது.

தலித்தலைவர்களை விலைபேசுவது,
அம்பேத்காருக்கு காவிச் சாயம் பூசுவது
அவர்களை RSSகலவரத்துக்கு அடியாளாக்குவது,பிள்ளையார் ஊர்வலத்தில் ஆடுவதற்கென 'தயார்' படுத்திதான் வைத்துள்ளார்கள்.

அமித்ஷா+பள்ளர்கள் கூட்டுக்கட்டு ஓர் உதாரணம். அவர்களில் ஒரு பிரிவை வைத்து இடஒதுக்கீட்டுக்கெதிராக பேசவைத்ததையும் நினைவிற் கொள்க.

மணிப்பூர்,காஷ்மீர் தனிநாடு கோரிக்கையை முறியடிக்க ராணுவமயம்,ராணுவ குடியேற்றம்.

பஞ்சாப் தனிநாடு கோரிக்கையை முறியடிக்க அவர்களை போதையில் நாதமாக்கியது.

தமிழ்நாட்டை அடிமையாக்கி வைக்க 40ஆண்டுகளாக தீவிரமாக நடந்து வரும் பார்ப்பன மயமாக்கம், பார்ப்பன மீட்சி.

தற்போது ஜாதி,மதவாத சக்திகளை திட்டமிட்டு வளர்ப்பது அதை முன்னெடுத்துச் செல்ல தோற்ற  ஜெயலலிதாவை ஜெயிக்க வைத்தது என தொடர்கிறது,

RSS+மோடி தலைமையில் நடைமுறைத்தப்பட்டு வருகிறது சட்டப்பூர்வ பாசிசம் அல்லது அறிவிக்கப்படாத பாசிசக் காட்டாட்சி.
அறிவிக்கப்படாத இந்து ராஷ்டிரம்
அறிவிக்கப்படாத மிசா

இந்த 5மாநிலத் தேர்தலில் பிஜேபிதான் பெரும்பான்மை பெறும் அல்லது ஜெயாவை ஜெயிக்க வைத்தது போல தேர்தலில் ஜெயிப்பார்கள்.

பிஜேபி வெற்றி உறுதியில்லாத உத்தரப்பிரதேசம் மட்டும்தான் அவர்களுக்கு முழு இலக்கு.

இனி, அமைதியை இழக்கப் போகிறது
உத்தரப் பிரதேசம்.
ஜாதி,மதக் கலவரங்கள் திட்டமிட்டுத் தூண்டிவிட இப்போதே குழுக்களை நியமித்து விட்டார்கள். தலைமை அமித்ஷாதான்.

எதிர்த்து நிற்க வலுவான சக்தியில்லாமல் பார்ப்பனீயம் கொட்டமடித்துக் கொண்டிருக்கிறது.

அவர்களது தீவிரஇந்துத்வாவை எதிர்கொள்ள முடியாமல் திணறுகின்றன
மிதவாத இந்துத்வா கட்சிகளான காங்கிரஸ்,கெஜ்ரிவால், மம்தா, முலாயம், லாலு,நிதிஷ்,தேவகௌடா,மாயாவதி போன்ற பிரதேச கட்சிகள்,

இந்துத்தீவிரவாதத்தை முறியடிக்க மதசார்பற்ற சக்திகளோடு சேராமல் தீய பக்கம் சரியும் முஸ்லீம்கள்.

தன் சித்தாந்தம்
மக்களை ஏன் சென்றடையமுடியவில்லை என ஆராயாமல் துண்டுதுண்டாக சிதறி உடைந்து கொண்டே இருக்கும் புரட்சிகர கம்யூனிஸ்ட்டுகள்.

மக்களை ஜாதியாக,மதமாக,இனமாக பிரித்து அடிமையாக்க ஏகாதிபத்தியமும் இந்துத்துவமும் கோடிகளை செலவாக்கி வருகிறது.

இப்படியாக RSS&மோடி கும்பல் எதிர்க்க யாருமில்லாமல் களத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

மிகப்பெரிய அழிவைச் சந்திக்க நாடு தயாராகிக் கொண்டிருக்கிறது.

கையறு நிலையில் கம்யூனிஸ்ட்டுகளும், பட்டாளி வர்க்கமும்

(பிஜேபி செயற்குழு பற்றிய பதிவு தொடரும்)

நன்றி : சகோ Manickam Palaniyapan அவர்களின் சிறப்பு மிக்க எச்சரிக்கை பதிவு!

தீய குணங்களும் தீர்க்கும் வழிகளும்!



*பத்து நாள் விமர்சனம்!*

இந்த தலைப்பு அறிவிக்கப்பட்டவுடன் மனிதனுக்கு ஆலோசனை சொல்லப்போகும் தலைப்பு போல இருக்கிறதே! இதில் என்ன மார்க்கம் தொடர்பாக வந்துவிடப் போகின்றது என பலரும் நினைத்தார்கள். மாஷா அல்லாஹ்! சகோதரர் பீ.ஜைனுல் ஆபிதீன் எடுத்து வைக்கும் ஒவ்வொரு வாதங்களும் நம்மிடம் காணக்கூடிய ஒவ்வொரு தீய குணங்களை ஒவ்வொன்றாய்ச் சுட்டிக்காட்டி நம்மிடம் இருக்கும் தீய குணம் நபிகளாரிடம் இல்லை, நம்மிடம் இருக்கும் தீய செயல் நபிகளாரிடம் இல்லை என ஒவ்வொன்றாகப் பட்டியல் போட்டு அந்த தீய செயலை செய்தால் நீ நபிகளாரைப் பின்பற்றக் கூடியவன் இல்லை என்று மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறார்.

• அனைவருக்குமே ஆச்சரியம்! என்ன இது நாம் எதிர்பார்த்த தலைப்பு பொதுவாழ்க்கை பற்றி பொதுவாக சொல்வார் என்று நினைத்தால் அனைத்துமே மார்க்கத்தின் ஊடே பிண்ணிப் பினைந்து பிரமாதமான ஒரு விருந்தினைப் படைத்து வருகின்றது தீய குணங்களும் தீர்க்கும் வழிகளும்.

• அபூதர் கிஃபாரி (ரலி) அவர்கள் ஒருமுறை தன்னுடைய அடிமையுடன் நடந்து வருகின்றார். இருவரும் ஒரேமாதிரி ஆடை அணிந்து இருப்பதைப் பார்த்த மக்கள் கேட்கின்றார்கள். அதற்கு அபூதர் சொல்கின்றார் உங்களின் அடிமைகள் உங்களுக்குச் சகோதரர்கள் என நபிகளார் சொன்னார்கள் என்ற வரலாற்றுச் சம்பவம் இன பேதத்தையும் யாருக்கும் யாரும் அடிமை இல்லை என்ற வாதத்தையும் அழுத்தமாக இந்த தொடரின் மூலம் பதிவு செய்தது, தீய குணங்களும் தீர்க்கும் வழிகளும்.

• பெருமை என்பது காசு பணத்தில் அல்ல! பெருமை என்பது உடல் ஆரோக்கியத்தில் தான். காசு பணம் இருந்தால் பகட்டான ஆடை அணியலாம், பகட்டான காரில் பயணம் செய்யலாம். ஆனால் விதவிதமாக சாப்பிட முடியாது. அதுபோல காசு பணம் இல்லாதவனுடைய உடல்  ஆரோக்கியமாக இருக்கிறது, பணம் காசு நிறைந்திருப்பவர் நோயாளியாக இருக்கிறார். ஆக பெருமை என்பது உடல் நலத்தில் மட்டும் தான் உடல் ஆரோக்கியத்தில் மட்டும் தானே தவிர பணத்தால் அல்ல!

• செய்யும் தொழிலில் கேவலமானது என்று எதுவுமே இல்லை, பிச்சையெடுத்தலைத் தவிர. நபிகள் நாயகம் கூட ஆடு மேய்த்தவர் தான். நூஹ் நபி கூட தச்சுத் தொழில் செய்தவர்கள் தான். ஆக இழிதொழில் என்று உலகத்தில் எதுவுமே கிடையாது, பிச்சையெடுத்தலைத் தவிர.

• ஏழைகளை உதாசீனப்படுத்துகிறீர்கள் நீங்கள். ஆனால் நீங்கள் உயிரினும் மேலாக மதிக்கக் கூடிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மட்டும் தான் உலகத்திலே இனி பிறக்க முடியாத ஏழை!. காரணம் மூன்று பிறை வந்தும் கூட அடுப்பு மூட்டுவதற்கு வசதியில்லாத ஏழை நபிகளார். சாப்பிட எதுவும் இல்லை என்பதற்காக நான் இன்று நோன்பாய் இருந்து கொள்கிறேன் என்று இருந்தவர் நபிகளார். அவரை விட ஏழை இன்றுவரை இல்லவே இல்லை. ஆக ஏழையை நீங்கள் இழிவாகப் பார்த்தால் அந்த இழிவை சுமந்து வாழ்ந்த நபிகளாரை இழிவாகப் பார்ப்பதற்கு சமம்.

• குலப் பெருமையை அறவே ஒழித்தார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். நபிகளார் தன் வளப்பு மகனாக தத்தெடுத்து வளர்த்த ஜைது(ரலி) ஒரு அடிமையாக இருந்தவர்தான். ஜைதுடைய மகன் ஒசாமா(ரலி) நபிகளாரின் அன்புக்குரியவராக இருந்தார். ஆனால் அவர் அடிமை இனத்தைச் சேர்ந்தவர். அந்த ஒசாமை உயர்ந்த குலத்தைச் சேர்ந்த அபூபக்ர்(ரலி), உமர் (ரலி) அவர்களுக்கு படைத்தளபதியாக நியமித்து அனுப்பி வைப்பார்கள். இதன்மூலம் இன பேதத்தை ஒழித்தார்கள் நபிகளார்.

• ஒரு விருந்து நடக்கும் போது அங்கே ஒரு அழுக்குச் சட்டையுடன் ஒருவர் வந்தால் அவரை விரட்டி அடிக்கிறது இந்த சமூகம். அவரை இழிந்த குலமாகப் பார்க்கிறது. ஆனால் நீங்களெல்லாம் ரலியல்லாஹூ அன்கு என்று சொல்லும் பிலால் அவர்கள் ஒரு கருப்பின தாழ்ந்த குலத்தைச் சேர்ந்த அடிமையே!

• மொழி வெறியை ஒழித்ததும் இஸ்லாம் தான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி என்று பெருமை அடிக்கின்றான். மொழி என்பது மனிதர்கள் பேசக்கூடியது தான். ஆனால் கல்லும் மண்ணும் தோன்றாத காலத்தில் ஒரு மொழி தோன்றியது என்று சொல்வது கட்டுக்கதை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அடுத்து எந்த ஒரு மொழியும் எந்த ஒரு மொழியையும் விட உயர்ந்ததும் அல்ல! சிறந்ததும் அல்ல என மொழி வெறியை உடைத்து எறிந்தது இந்த நிகழ்ச்சி

• தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிகழ்ச்சிகளை உளவுத்துறையினர் பார்த்திருப்பார்கள். அவர்கள் மேலிடத்துக்கு எப்படி ரிப்போர்ட் கொடுக்கப் போகிறார்கள்? பீ.ஜைனுலாபீதீன் பேசுகிறார். முஸ்லிம்கள் பின்பற்றும் நபிகள் நாயகம் சொன்னதாக ஒவ்வொன்றையும் புட்டுப் புட்டு வைக்கிறார். இனவெறி இல்லை என்கின்றார், மொழி வெறி இல்லை என்கின்றார், ஜாதி வெறி இல்லை என்கின்றார். ஏழைகளை அரவணைக்கச் சொல்கிறார், அடிமைகள் என்று யாரும் இல்லை என்று சொல்கின்றார், தொழிலை வைத்து யாருக்கும் உயர்வு தாழ்வு இல்லை என்று சொல்கிறார். ஆக சகோதரத்துவத்தையும் சமாதானத்தையும் முழுக்க முழுக்க இனக்கத்தையும் பேன வேண்டும் என்று தான் தன்னுடைய உரையில் தெரிவிக்கிறார் என்று ரிப்போர்ட் கொடுப்பதைத் தவிர வேறு எப்படியும் கொடுத்து விட முடியாது.

• ஒவ்வொரு சம்பவத்திற்கும் சரியான ஆதாரங்களையும் திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ் எண்களையும் கொடுத்து சொல்லப்படும் நிகழ்ச்சி இது தான் இது மட்டும் தான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

• அறிவுறை சொல்லும் போது கூட திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் மக்களை செதுக்கும் ஒரே ஜமாஅத் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் என்பதில் பெருமிதம் கொள்ள வேண்டும். இன்னமும் கட்டுக்கதைகளையும் புளுகு மூட்டைகளையும் மார்க்கமாகப் பேசித்திரியும் புண்ணாக்கு வியாபாரிகளுக்கு மத்தியில் சகோ.பீஜே மிளிரக் கூடிய வைரம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!

       -இன்ஷா அல்லாஹ் விமர்சனம் தொடரும்…..

*அஹ்மத் கபீர்*