Sunday, 1 May 2016

உருது தெரியாமல் எப்படி முஸ்லிமாக இருக்க முடியும்?

அறிமுகம் இல்லாத உருது பேசுபவன் கிட்ட எதார்த்தமா பேசிகிட்டு இருக்கும் போது

ஜீ நீங்க முஸ்சல்மானானு கேட்டான்.!?

அப்படினா என்னனு நான் கேட்க

அவன்:- இல்ல ஜீ முஸ்லீமானு கேட்டேன்

நான்:- ஆமா ஏன் கேக்குறிங்க

அவன்:- இல்ல முஸ்லீமா இருந்துகிட்டு உருது பேச மாட்றிங்க.!!

நான்:- முஸ்லீமா இருந்தா உருது கட்டாயமா பேசனும்னு யார் சொன்னது.!?

அவன்:- பாரம்பரியமா முஸ்லீம்கள் உருது பேசிகிட்டு தான வராங்க.!!

நான்:- உருது மொழி தோன்றுவதற்கு முன்பே தமிழக பகுதியில் எங்கள் முன்னோர்கள் இஸ்லாத்தை ஏற்றுவிட்டார்கள் அதாவது முகலாயர்கள் வருகைக்கு முன்பே

இந்தியா முழுவதும் ஆட்சி செய்த முகலாயர்கள் தென் தமிழகம் மற்றும் மலபார் பகுதிகளில் ஆட்சி செய்ததில்லை இன்றும் இந்த பகுதியில் பெரும்பாலான முஸ்லீம்களுக்கு உருது என்றால் என்னவென்று தெரியாது அது போல் தான் நானும்.!

உருது என்பது முஸ்லீம்களின் மொழி இல்லை அது முகலாயர்களின் ரகசிய மொழியாக இருந்தது,

தமிழக முஸ்லீம்களின் முன்னோர்கள் முகலாயர்கள் கிடையாது.!! இன்று வட தமிழகத்தில் உருது பேசுபவர்கள் கூட முகலாயர்கள் காலத்தில் உருதை கற்ற தமிழர்கள் என்று எனக்கு தெரியுது ஆனால் உன்னை போன்றவர்களுக்கு இது தெரியாததால் தான் நம் நாட்டில்
முஸ்லீம்கள் என்றாலே உருது பேசுவார்கள்  வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என்றும் சிலர் நினைக்கிறார்கள் கூடவே துருக்கர்கள்(துளுக்கன்) என்று துருக்கி நாட்டவன் போல அன்னியபடுத்துகிறார்கள்

முஸ்லீம்கள் என்றாலும் மொழி வேறு என்பதால் தான் பாகிஸ்தானைவிட்டு
பங்களாதேஷ் பிரிந்தார்கள். அரபியர்களிடமும்,துருக்கியர்களிடமும் குர்துக்கள் பிரிந்து வாழ்கிறார்கள்,
பின் எப்படி உருது முஸ்லீம்களின் மொழி என்று சொல்லுறனு முடித்தேன்

அவன்:- கப்சிப்!!!!!!!!!!

சில முஸ்லீம் கிட்ட தமிழ் மொழி வெறி இருப்பது போல் உருது மொழி வெறி இருப்பதையும் உணர்ந்தேன்.!

Src:whatsapp

கோடை நோய்களை தடுப்பது எப்படி?

🌤 கோடைக்காலம் ஆரம்பித்துவிட்டது

☀ அக்னி உக்கிரமடைவதற்கு முன்னரே வெயில் நம்மை மிரட்ட தொடங்கிவிட்டது

☀ அடுத்த மூன்று மாதங்களுக்கு அனல்

♨ அரிப்பு

😓  வியர்வை

😒 சோர்வு

⭕ என்று பல தொல்லைகளும் சேர்ந்து கொள்ளும்.

🚫  இத்தகைய பாதிப்புகளிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்வது எப்படி?

🌡 மனித உடலின் இயல்பான வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ்

🌤  கோடையில் வளிமண்டல வெப்பநிலை சர்வ சாதாரணமாக 40லிருந்து 45 டிகிரியை தொடுகிறது.

😓 அப்போது உடலை குளிர்விக்க அதிக அளவில் வியர்வை சுரக்கிறது

😓  உடலை சுத்தமாக பராமரிக்கவிட்டால் தோலில் உள்ள வியர்வை சுரப்பிகளில் அழுக்கு அடைத்துக்கொள்ளும்
இதனால் வியர்க்குரு வரும்.

🏊🏾 இதை தவிர்க்க தினமும் இரு வேளை குளித்தால் நல்லது.

💢 தோலின் மூலம் வெளியேற வேண்டிய உப்பு, யூரியா போன்றவை சரியாக வெளியேற முடியாமல் அழுக்கு போல் தங்கிவிடும்.

🔘  அப்போது அங்கு பாக்டீரியா தொற்றிக்கொள்ள அந்த இடம் வீங்கி புண்ணாகும்.

🔴 உடலில் ஈரமுள்ள பகுதிகளில் பூஞ்சை கிருமிகள் எளிதில் தொற்றிக்கொள்ளும்.

♨ குறிப்பாக வியர்க்குருவில் இத்தொற்றும் சேர்ந்துகொண்டால் அரிப்புடன் கூடிய
படை
தேமல் தோன்றும்.

💈 படையை குணப்படுத்தும் களிம்பு அல்லது பவுடரை தடவிவர இது குணமாகும்.

🌤  கோடையில் சிறுநீர் கடுப்பு அதிக தொல்லை தரும்.

  💧 அளவுக்கு மீறி வியர்வை வெளியேறுதல் மற்றும் தேவையான அளவு தண்ணீர் குடிக்காதது இதற்கு முக்கிய காரணம்.

💧  உட்கொள்ளும் தண்ணீர் அளவு குறையும்போது சிறுநீரின் அளவும் குறைந்துவிடும்.

💢 இதனால் சிறுநீரின் மூலம் வெளியேற வேண்டிய உப்புகள் கடினமாகி சிறுநீர் பாதையில் படிகங்களாக படிந்துவிடும்

⭕ இதன் விளைவுதான் நீர்க்கடுப்பு

💧 நிறைய தண்ணீர் குடித்தால் இந்த பிரச்னை வராது.

🍲 வெயில் காலத்தில் சமைத்த உணவு வகைகள் விரைவில் கெட்டுவிடும்.

❌  அவற்றில் நோய் கிருமிகள் அதிகமாக பெருகும்.

🍲  இந்த உணவுகளை சாப்பிட்டால் பலருக்கு
வாந்தி
வயிற்றுபோக்கு

⭕ சீதபேதி

⭕ காலரா

⭕ டைபாய்டு

⭕ மஞ்சள் காமாலை
போன்ற நோய்கள் வரும்.

🍲 இதனால் வெயில் காலத்தில் சமைத்த உணவுகளை உடனுக்குடன் பயன்படுத்திவிடுவது நல்லது.

🍲 உணவு மீது ஈக்கள் மொய்க்காமல் மூடி பாதுகாக்க வேண்டியதும் அவசியம்.

⚗  தண்ணீரை கொதிக்க வைத்து ஆற வைத்து குடிக்கவேண்டும்.

🌡 வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்போது உடலின் வெப்பம் 106 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் தாண்டிவிடும்.

😔அப்போது உடல் தளர்ச்சி அடையும்.

😒  களைப்பு உண்டாகும்.

💧  தண்ணீரின் தாகம் அதிகமாக இருக்கும்.

⭕இதில் தலைவலி

⭕ வாந்தி

⭕ மயக்கம்

⭕ தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகள் தோன்றும்

☀ அளவுக்கு மீறிய வெப்பத்தின் காரணமாக உடலின் உப்புகள் வெளியேறிவிடுவதால் இந்த தளர்ச்சி ஏற்படுகிறது.

☀வெயில் காலத்தில்

☕ காபி

☕ தேநீர் குடிப்பதை குறைத்து கொள்ளுங்கள்.

🍸  பாட்டில் குளிர்பானங்களை குடிக்க வேண்டாம்.

🍹 காரணம்? குளிர்பானங் களை வரம்பின்றி குடிக்கும்போது அவற்றில் உள்ள குளிர்ச்சியானது ரத்த குழாய்களை சுருக்கி உடலின் வெப்பத்தை இன்னும் அதிகமாக்கிவிடுகிறது.

🍹 இதற்கு பதிலாக

🍏 இளநீர்

🍶மோர்

🍷சர்பத்

🔘 முதலியவற்றை குடிக்கலாம்

🌴  இளநீரில் உள்ள பொட்டாசியம்

⭕ சோடியம்

⭕ கால்சியம்

🌡  மெக்னீசியம் முதலிய தாதுக்கள் உடலின் வெப்பத்தை உள்வாங்கி சுற்றுச்சூழல் வெப்பநிலைக்கு ஏற்றபடி உடலின் வெப்பத்தை குறைகின்றன.

💧 இதனால் உடலில் நீரிழிப்பால் ஏற்படுகின்ற பாதிப்புகள் உடனடியாக குறைகின்றன.

🍋 எலுமிச்சை பழச்சாற்றில் உப்பு அல்லது சர்க்கரை கலந்து சாப்பிடுவது குறைந்த செலவில் நிறைந்த பலனை பெற உதவும்.

🍲 உணவு வகைகள்:

🍽  இட்லி

🍝 இடியாப்பம்

🍚 தயிர்சாதம்

🍛 மோர்சாதம்

⚱ கூழ்

🌿 அகத்திகீரை

🌱 முருங்கைக்கீரை
🌿 பொன்னாங்கண்ணிக்கீரை

🔸 கேரட்

🔸 பீட்ரூட்

🔸  பீர்க்கங்காய்

🔸வெண்டைக்காய்

🔸முள்ளங்கி

🔸 பாகற்காய்

🔸 புடலை

🔸 அவரை

🔸 முட்டைகோஸ்

🔸 வாழைத் தண்டு

🔸வெங்காயபச்சடி

🍅 தக்காளி கூட்டு போன்றவை கோடைக்கால உணவு வகைகள்.

🍉 தர்பூசணி

🔹 வெள்ளரி

🍐 கொய்யா

🔹 பப்பாளி

🔹சாத்துக்குடி

🍊 ஆரஞ்சு

🍇 திராட்சை போன்ற நீர்ச்சத்து உள்ள பழங்களை அதிகமாக சாப்பிடுங்கள்

♨  இவற்றில் பொட்டாசியம் வியர்வையுடன் வெளியேறிவிடும்.

🚫 தவிர்க்க வேண்டியவை

🍤 கோடையில் எண்ணெயில் பொரிக்கப்பட்ட

🍟 வறுக்கப்பட்ட கொழுப்பு அதிகமுள்ள உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்

🍡 சர்க்கரை அதிகமுள்ள இனிப்பு பலகாரங்கள்

🍰  கிரீம் மிகுந்த பேக்கரி பண்டங்கள்

🍔 பர்கர்

🍥 பீட்சா

🍦 ஐஸ்கிரீம் போன்றவை தண்ணீர் தாகத்தை அதிகப்படுத்தும் என்பதால் இவற்றையும் தவிர்ப்பது நல்லது.

🍣  அதேபோல் சூடான, காரமான மசாலா கலந்த உணவுகளையும் குறைத்துக்கொள்ள வேண்டும்.

☂  கோடையில் 2 மணி நேரத்திற்கு மேல் தொடர்ந்து வெயிலில் இருப்பதை தவிர்க்க வேண்டும்

🚫 பகல் 12 மணியிலிருந்து மாலை 4 மணி வரை வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது.

☂ அவசியம் செல்ல வேண்டும் என்றால் குடையை எடுத்து செல்லுங்கள்.

⛱ முடிந்தவரை நிழலில் செல்வது நல்லது.

மூலம்
🏧adminTHOWHEEDmedia🏧
☀☀☀☀☀☀☀☀☀

தமிழகத்தில் இருக்கும் அனைவரையும் ஒருவன் மொட்டையடித்த கதை தெரியுமா???


1 சர்க்கரை அதிகமாக  சாப்பிடக்கூடாது

2 அயோடின் உப்பு மட்டுமே சாப்பிடவேண்டும்

3  நாள் ஒன்றிற்கு 8 லிட்டர் நீர் குடித்தே ஆகவேண்டும்

4  இரண்டு தேக்கரண்டி எண்ணையை தினமும் குடித்தால்  உடலுக்கு நல்லது

5. ஆயில் புல்லிங்

6. காம்பிளான் குடித்தால் வளரலாம்

7. ஹார்லிக்ஸ் ஆக்குமே பிள்ளைகளை ஸ்ட்ராங்கா ஹைக்டா சார்பா

8. கிளினிக் பிளஸ் கூந்தலை ஆக்கிடுமே அடர்த்தியா

9. பூஸ்ட் இஸ் த சீக்ரட் ஆஃப் மை எனர்ஜி

10. 2 நிமிடத்தில் சமைத்திடுங்கள் நூடுல்ஸ்

வீட்டில் இருக்கும் தொலைக்காட்சி பெட்டிகளில் ஓடும் பன்னாட்டு நிறுவனங்களின் விளம்பரங்களினால் ஒருவர் நம்மை எளிமையாக ஏமாற்ற முடியுமென்றால்  உயர்நிலைப்பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் சென்று நாம் கல்வி பயல்வதால் என்ன பயன் ????

நமது ஊரில் விளையும் நிலக்கடலையை உண்டால் ஆண்மைக்குறைபாடு ஏற்படும் என சில வருடங்களுக்கு முன் செய்திகள் வெளியாயின
அதன் பிறகு நிலக்கடலை மோகம் நம்மைவிட்டு பிரிந்துசென்றது அதனை தொடர்ந்து பாதாம் பிஸ்தா என வாங்கி உண்டோம்

அந்த இடைவெளியில் கடலைகள் நம் ஊரில் அதிகமாக தேங்க இதுதான் சமையம் என்று ஒட்டுமொத்தமாக உலகின் மிகப்பெரிய சாக்லேட் நிறுவனம் அதை குறைந்த விலைக்கு அள்ளிச்சென்றது

பின்விளைவு

பாதாம் பிஸ்த்தா பதித்த சாக்லேட்டுக்கு பதில் வெளிநாடுகளில் நிலக்கடலைகள் பதித்த சாக்லேட்டுகள் அமோக விற்பனையாக தொடங்கியது  ஏனென்றால் அவர்களுக்கு தெரியும் நிலக்கடலை உடலுக்கு மிகவும் உகந்ததென்று

சில வருடங்களுக்கு முன் அரிசியை அதிகளவு  உண்பதால் நம் உடலின் சர்க்கரை அளவு அதிகமாகிறது என்ற தகவல் பரவி அது அனைவரையும் அரிசியை அதிகம் உண்ணவிடாமல் செய்தது அதற்கு மாறாக நாம் கோதுமை உணவை அதிகம் எடுத்துக்கொண்டோம்

பின்விளைவு

அதிக விலைக்கு பன்னாட்டு நிறுவனங்களால் மேலை நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்யப்பட்ட்து
உணமையாக நமது உடலில் சர்க்கரை அளவை அதிகரிக்கும் உணவு எது தெரியுமா மைதா

சச்சின் கூறினார் என்று பூஸ்ட் வாங்கினோம் ஆனால் அதில் நாம் விளைவிக்கும் மக்காச்சோளமும் கேப்பையும்தான் இருக்கிறது என்பதை அறியாமல்

டோனி கூறினார் என்று பெப்சி குடித்தோம் இன்று இளநீரின் எல்லாம் மருத்துவகுணங்களை அறிந்தவன் கைக்கு கிடைத்துக்கொண்டிருக்கிறது

இப்படியே ஒவ்வொன்றையும் இழந்துகொண்டிருக்கிறோம் நாம் ஏமாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறோம் என்று உணராமல்

இன்னும் கொஞ்ச நாட்கள் சினிமாவிலும் கிரிக்கெட்டிலும் மூழ்கி விடுங்கள் நாளை நீங்கள் உங்களையே இழந்துவிடுவீர்கள்

இறுதியாக ஒன்றே ஒன்றை கூறிக்கொள்கிறேன்

மதுக்கடைகள் அதிகரிப்பது மட்டும் தீங்கு அல்ல
மருத்துவமனைகள் அதிகரிப்பதும் தீங்கின் அடையாளம்தான் ..

மதுவை விட பாதிப்பை ஏற்படுத்தும் பிராய்லர் கோழி

⚠ Warning ⚠
மதுவை விட பாதிப்பு❓
   🐓🐓 கோழி 🐓🐓

கட்டாயம் படியுங்கள் பயனுள்ள பதிவு.

⚠⚠⚠⚠⚠⚠⚠⚠⚠⚠⚠

40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும் பிராய்லர் கோழி🐓 வளர 12 விதமான கெமிக்கல்ஸ், கோழி சாப்பிடும் உணவோடு கலக்கப்படுகிறது.
பிராய்லர் கோழிகளுக்கு அளவுக்கு அதிகமாக ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் கொடுக்கப்படுகிறது. இதனால் கோழிகளுக்கு வரும் குணப்படுத்தக்கூடிய நோயையும் குணப்படுத்த முடியாமல் போவதோடு, இறைச்சியை சாப்பிடும் மனிதர்களுக்கும் நோய்க்கூறுகள் தோன்றுகின்றன என்று சிஎஸ்இ நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

🐓ஆண்களின்  உயிரணுக்களை அழிக்கிறது.😯
ஆண்மையை அழிக்கும் பிராய்லர்

🐓குழந்தையின்மைக்கு முக்கிய காரணம் பிராய்லர் கோழி.😯

🐓"பத்துப் பதினோரு வயது சிறுமிகள் பெரியமனுஷி ஆவதற்கு பிராய்லர் கோழி தான் காரணம்".😯

🐓டைலோ சின் போஸ்பேட், டினிடோல்மைடு, டயாமுலின் ஹைடயோஜின், மைக்ரோமைன்-பி.சி.எஃப், டோக்சிலின்-ஈ.எஸ்., யூ.எஸ்., குர்ராடோக்ஸ் எம்.எஸ்., நோவா சில்பிளஸ் போன்ற மருந்துகளை ஊசிமூலம் போடுகிறார்கள்.😯

"இந்த மருந்துகள்தான் சின்னஞ் சிறுமிகளையும் பெரிய மனுஷிகளாக்கி விடுவதாக கூறப்படுகிறது".😴😴

🐓பிராய்லர் கோழி சதையு (கொலஸ்ட்ரால்) அதிக அளவில் உள்ளது. இதை நாம் சாப்பிடும்போது நமது உடலில் கெட்ட கொழுப்பு சத்துதான் அதிக அளவில் சேருகின்றன. இந்த கெட்ட கொழுப்பானது நமது கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது.😟

🐓கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால், அது ரத்த நாளத்தில் புகுந்து அடைப்பை ஏற்படுத்துகிறது. இதனால் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.😇

🐓100-ல் 65 பேருக்கு கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் உள்ளது. இங்குள்ள பெரும்பாலான உணவகங்களில் ஏற்கனவே பயன்படுத்திய எண்ணையை அதிக அளவில் பயன்படுத் துவதால் கல்லீரல் கோளாறின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள்.😇😕

🐓சிறு நீரகங்களிலும் கல்லீரல்களிலும் கேன்சர் உருவாகிரதாம்.😳

🐓தொடர்ச்சியாக பிராய்லர் கோழி சாப்பிடுவோர் குடல் புற்றுநோயின் பிடியில் சிக்கி விடுவார்கள்.

🐓மேலும் இதை விரும்பி சாப்பிடும் நமக்கு எலும்புகளில் இருக்கும் சத்து முற்றிலும் அழிகிறது.😯

🐓மஞ்சள் காமாலை , இரைப்பை,, கல்லீரல் செயலிழப்பு என்று வியாதிகளின் எண்ணிக்கையை அடுக்கலாம் .😟

🐓ப்ராய்லர் கோழி மற்றும் முட்டைகளை அதிகமாக சாப்பிட்ட நாமக்கல் மக்களுக்கு இப்போது புற்று நோய் பிரச்சனை அதிகமாக பரவி வருகிறது .... அவர்கள் படும் கஷ்டங்களை கோழி பண்ணைகளின் தலைவர்களான சில அரசியல்வாதிகள் வியாபார நோக்கத்துடம் உண்மை மக்களிடம் போகாமல் பார்த்து கொள்கின்றனர்.

📳 பகிருங்கள் 📳

தன்மானம் காத்த தவ்ஹீத் ஜமாஅத்

                  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தேர்தலில் போட்டியிடாத அமைப் பாகும். சாதாரண பஞ்சாயத்து போர்டு தேர்தலிலிருந்து பாரளுமன்றத் தேர்தல் வரை எதிலும் போட்டியிடக் கூடாது என்று ஆரம்பக் காலம் தொட்டு இன்று வரை அது எடுத்த முடிவில் உறுதியாக இருந்து வருகின்றது.
ஆனால் அதே சமயம் கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தல் வரை இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையை முன் வைத்து மாறி மாறி அதிமுக, திமுக என்று ஆதரவு தெரிவித்து வந்தது. தவ்ஹீத் கொள்கைக்குப் பாதகமும், பழுதும் வந்து விடக் கூடாதென்று தங்களைச் சுற்றிலும் பல அடுக்கு பாதுகாப்பு வட்டங் களையும், வளையங்களையும் போட்டுக் கொண்டு களப் பணியும் ஆற்றியது.
1. ஆளுங்கட்சி அல்லது எதிர்க் கட்சிகளின் மேடைகளில் தவ்ஹீத் ஜமாஅத்தினர் ஏறக் கூடாது.
2. அரசியல் கட்சியினர் யாரும் நமக்குப் பொன்னாடைகள் போர்த்தக் கூடாது; மலர் மாலைகள் அணிவிக்கக் கூடாது; நாமும் அரசியல் தலைவர் களுக்கு இவற்றை அணிவிக்கக் கூடாது.
3. அரசியல் கட்சித் தலைவர்கள் மேடைக்கு வரும் போது மரியாதைக் காக எழுந்து நிற்கக் கூடாது.
4. தேர்தல் பிரச்சாரத்திற்காக அரசியல் கட்சிகள் தங்கள் செலவில் நமக்கு மேடைகள் அமைத்துத் தர வேண்டும். அந்த மேடையில் அரசியல் கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள் பங்கேற்கலாம்.
5. தேர்தல் பிரச்சாரத்திற்கான போக்குவரத்து, விளம்பரங்கள் போன்ற அனைத்துச் செலவுகளையும் அரசியல் கட்சிகளே செய்ய வேண்டும். அரசியல் கட்சி வேட்பாளர்கள், நம்மிடம் பொறுப்பை ஒப்படைத்து செலவுக்குப் பணம் தருகின்ற பட்சத்தில் செலவு போக மீதப் பணத்தை அந்தக் கட்சி வேட்பாளர்களிடமே திரும்ப ஒப்படைத்து விட வேண்டும்.
6. தேர்தலுக்குப் பிறகு அரசியல் கட்சியினருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது.
7. உள்ளூர் பகுதியில் வேட்பாளர் களிடம் வாங்கிய பணத்திற்கு முறையான கணக்கு வழக்குகளை தலைமைக்கு வரையறுக்கப்பட்ட காலத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும். இல்லையென்றால் அவர்கள் மீது ஒழுங்கு எடுக்கப்படும்.
இதுபோன்ற எண்ணற்ற பாதுகாப்பு வட்டங்களும் வளையங்களும் ஏன்? எதற்கு?
அரசியல்வாதிகளிடம் வார்த்தைக்கு வார்த்தை வணக்கம் என்பது சர்வ சாதாரணமாக மூச்சுக்கு முன்னூறு தடவை வரும். அவர்களை அறியாமலேயே கைகள் யாரைக் கண்டாலும் கும்பிடு போட்டுத் தொழும். தனி மனித புகழ், துதி பாடல் கொடி கட்டிப் பறக்கும். மொத்தத்தில் அரசியல்வாதிகளை ஷிர்க் எனும் இணை வைப்பு ஆக்கிரமித்து நிற்கும்.
இதுபோன்ற கட்டத்தில் தவ்ஹீது வாதி இந்த இணைவைப்பில் விழுந்து விட்டால் கண்ணை விற்று சித்திரம் வாங்கிய கதையாகி விடும். அதாவது ஏகத்துவம் என்ற உயிரினும் மேலான கொள்கையை, கண்ட கிரயத்திற்கு விற்று விட்டு இட ஒதுக்கீட்டை வாங்குகின்ற கதையாகி விடும். அதனால் தான் இத்தனை தடுப்புச் சுவர்கள்! தடை அரண்கள்!
அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும். ஒரு சிலரைத் தவிர மீதி ஜமாஅத் பொறுப்பாளர்கள் தங்கள் பொறுப்புகளை சரியாக நிறைவேற்றி, செலவு செய்த மிச்ச மீதப் பணத்தை வேட்பாளர்களிடம் கொண்டு போய்ச் சேர்த்தனர். இதைப் பார்த்த வேட்பாளர்கள், "இந்தக் காலத்தில் இப்படி நாணயத்திற்கும் நம்பிக்கைக் கும் உரியவர்கள் இருக்கின்றார்களா?'' என்று வினாக்குறிகளுடன் விழிப் புருவங்களை உயர்த்தி வியப்பில் உறைந்து போயினர்.
இவ்வளவுக்குப் பிறகும் "தேனை எடுத்தவன் புறங்கையை நக்காமல் இருப்பானா?' என்று நம்முடைய நாணயத்தை எதிரிகள் கொச்சைப் படுத்தினர்.
ஹஜ் சர்வீஸ், வெளிநாட்டுக்கு ஆள் அனுப்புகின்ற ஏஜண்ட் தொழில், ரியல் எஸ்டேட் தொழில் ஆகியவை ஹலாலான தொழில்கள் தான் என்றாலும் அவற்றில் ஏமாற்று வேலைகள், வாக்குறுதிக்கு மாற்றமான செயல்பாடுகள், பொருளாதார மோசடிகள் உள்ளே நுழைந்து சம்பந்தப்பட்டவர்களின் நம்பிக்கையை யும் நாணயத்தையும் தாக்கி தகர்த்து நிர்மூலமாக்கி விடுகின்றன. எனவே ஜமாஅத்தின் அனைத்து மட்ட நிர்வாகிகள் இவற்றைச் செய்யக் கூடாது என்று விதியை ஏற்படுத்தியது.  ஐயத்திற்கும், அச்சத்திற்கும் இடமளிக் கின்ற அத்தனை வாசல்களையும் தவ்ஹீது ஜமாஅத் அடைத்து விட்டது.
தவ்ஹீத் ஜமாஅத்தின் அந்த நம்பிக்கையிலும், நாணயத்திலும் அந்த வகையில் அறவே குறை காண முடியாத அளவுக்கு அப்படியே வாயடைத்துப் போன எதிரிகள், திறந்து கிடக்கின்ற, ஐயத்திற்கு இடமளிக்கின்ற தேர்தல் ஆதரவு என்ற வாசல் வழியாக வந்து தங்களது தாக்குதல் களைத் தொடுத்தனர்.
இதற்கும் தவ்ஹீத் ஜமாஅத் தனக்கே உரிய தனி பாணியில் எதிரிகள் தலை தூக்க முடியாத அளவிற்கு, தலை தெறிக்க ஓடும் அளவிற்குச் சரியான பதிலடியைக் கொடுத்தது.
எனினும் ஏகத்துவக்கொள்கையைச் சொல்கின்ற நம்மீது எள்ளளவு கூட குறைச் சொல்ல முடியாத அளவுக்கு ஐயத்திற்கும் அச்சத்திற்கும் உரிய அத்தனை வாசல்களையும் அடைத்த நாம் இந்த வாசலை மட்டும் ஏன் தாழிடாமல் திறந்து வைக்க வேண்டும்? என்று யோசித்து ஆய்வு செய்து கடந்த பொதுக் குழுவில் அந்த வாசலையும் ஓட்டை உடைசல் இல்லாமல் தவ்ஹீது ஜமாஅத் அடைத்து விட்டது.
அரைக்க அரைக்க சந்தனம் மணப்பது போல் இந்த வகையில் தவ்ஹீது ஜமாஅத், வளர வளர அதன் தூய்மை மேலும் மேலும் வளர்ந்து கொண்டே செல்கின்றது. அல்லாஹ் இந்த இயக்கத்தினரை நேர்வழியின் பால் நடத்திக் கொண்டு செல்கின்றான். இதோ திருக்குர்ஆன் கூறுகின்றது.
நேர்வழி பெற்றோருக்கு நேர்வழியை அல்லாஹ் அதிகமாக்கு கிறான். நிலையான நல்லறங்களே உமது இறைவனிடம் சிறந்த கூலிக்கும், சிறந்த தங்குமிடத்திற்கும் உரியது.
அல்குர்ஆன் 19:76
நேர்வழி பெற்றோருக்கு அவன் நேர்வழியை அதிமாக்கி, அவர்களுக்கு (தன்னைப் பற்றிய) அச்சத்தையும் வழங்கினான்.
அல்குர்ஆன் 47:17
பொருளாதார ரீதியில் மட்டு மல்லாமல், ஏதாவது ஒரு கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் போது வேறு சில பாதிப்புகளும் ஏற்பட்டன. சில முடிவுகளை நாம் தவ்ஹீத் ஜமாஅத்தில் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று எடுப்போமே அம்மாதிரி எடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டோம். அதிமுகவுக்கு ஆதரவு கொடுக்கும் போது திமுக அபிமானிகளாலும், திமுகவுக்கு ஆதரவு கொடுக்கும் போது அதிமுக அபிமானிகளாலும் இவர் வெற்றி பெற்ற பிறகு பிஜேபியுடன் சேர்ந்து விட்டால் என்ன செய்வது? என்ற கேள்வி அதிகமாகக் கிளப்பி விடப்பட்டது. இதற்கு நம்மால் உத்தரவாதம் கொடுக்க முடியாமல் ஆனது.
இப்போதைய நிலையைத் தான் பார்க்க முடியும். நாளை நடப்பதற்கு உத்தரவாதம் கொடுக்க முடியாது என்று நாம் சொன்னாலும் இது நமது ஜமாஅத்திற்குரிய நேர்த்திமிக்க நெத்தியடிப் பதிலாக இல்லை. இப்படிப்பட்ட இக்கட்டான நிலையை நாம் சந்திக்க நேர்ந்தது. இப்போது அது மாதிரியான நெருக்கடி நீங்கி, அதன் கண்ணியம் காக்கப்பட்டு விட்டது.
இப்போது தேர்தல் காலம். இன்றைக்கு நமது ஜமாஅத்தின் அழைப்புப் பணி தேர்தல் களத்தை விட சூடாக நடந்து கொண்டிருக் கின்றது. அழைப்புப் பணிக்கு கோடை காலம், மழை காலம் என்ற பாகுபாடு கிடையாது. அது போல் அதற்குத் தேர்தல் காலம் தேர்தல் அல்லாத காலம் என்ற பாகுபாடும் கிடையாது. காரணம் இது மக்களின் உயிர் காக்கும் பணியாகும். மக்களை நரகத்திலிருந்து மீட்கின்ற காக்கின்ற அவசியமான அவசரமான உன்னதப் பணியாகும்.
உயர்ந்த அந்த அழைப்புப் பணியை தேர்தல் காலத்திலும் நாம் செய்யாமல் இருந்தில்லை. எனினும் தேர்தல் அல்லாத காலத்தை விட அது சதவிகிதத்தில் மிகவும் பலமடங்கு குறைவானது என்பதையும் நாம் மறுக்க முடியாது.
இதற்குக் காரணம், தேர்தல் காலத்தில் சம்பந்தப்பட்ட கட்சிகள் களப்பணியை ஆரம்பிப்பதற்கு முன்னாலேயே நமது ஜமாஅத்தின் உறுப்பினர்கள் கட்சிக்காரர்களை மிஞ்சி களப்பணி ஆற்ற ஆரம்பித்து விடுவார்கள். முஸ்லிம்கள் அதிகமாக வாழ்கின்ற பகுதிகளில் தேர்தல் பணி களைகட்டவும் அனல் பறக்கவும் துவங்கி விடும். நம்முடைய முழு சக்தியும் தேர்தல் களத்தை நோக்கியே திருப்பி விடப்பட்டு விடும் நிலை இருந்தது.
இப்போது அதையெல்லாம் எண்ணிப் பார்த்து வேதனை அடைகின்றோம். நம்முடைய முழு ஆற்றலையும் இந்த அழைப்பு பணிக்கு செலவிடத் தவறி விட்டோமே என்று நாம் வருத்தப் படுகின்றோம். இந்த அரசியல் கட்சிக்காரர்களுக்கு கொடுத்த ஆதரவு காரணமாக நாம் சந்தித்த அடிதடி சண்டைகளுக்கான வழக்குகள் இன்று வரை நீதிமன்றங்களில் நடந்து கொண்டிருக்கின்றன. வாரம் தவறாமல் நீதிமன்ற வாய்தாவுக்கு சென்று கால் கடுக்க நின்று காலத்தையும், காசு பணத்தையும் செலவழித்து விட்டுத் திரும்பி வருகின்ற நம் கொள்கைச் சகோதரர்கள், இந்த வழக்கை ஏகத்துவக் கொள்கைக்காக வேண்டி சந்தித்திருந்தால் மனம் ஆறுதலாக இருந்திருக்கும் என்று ஆதங்கப் படக்கூடிய நிலையை நாம் பார்க்கின்றோம். அந்த அளவுக்கு தேர்தல் ஆதரவு நம்முடைய உழைப்பை உறிஞ்சி இழுத்து விட்டது.
இந்தத் தேர்தலில் அல்லாஹ் வுடைய அருளால் நமது மொத்த உழைப்பையும் அழைப்பு பணியிலேயே திருப்பி விட்டோம். தேர்தல் காலத்தில் இதற்கு முந்தைய தேர்தல் காலம் போல் அல்லாமல் அழைப்புப் பணியின் பக்கம் திரும்பியது நமக்குப் பெரிய ஆறுதலாகவும், மன நிம்மதியாகவும், நிறைவாகவும் இருக்கின்றது.
குறிப்பாக, ஏகத்துவக் கொள்கை எங்கள் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கிறது என்ற சொல்லி முதுகில் குத்திய துரோக அமைப்பு கடந்த பத்து ஆண்டுகளில் அடைந்த இழிவுகளைப் பார்த்த பிறகு, அல்லாஹ் நமது ஜமாஅத்திற்கு வழங்கியுள்ள கண்ணியத்திற்காக நாம் அவனுக்கு நன்றி செலுத்தக் கடமைப் பட்டுள்ளோம்.
தேர்தலில் ஒரு சில சீட்டுகளைப் பெற்று சட்டமன்ற உறுப்பினராகவோ நாடாளுமன்ற உறுப்பினராகவோ ஆகி விடலாம். ஆனால் அதற்காக அவர்கள் படுகின்ற கேவலத்தை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
ஐந்து வருடம் அதிமுகவுடன் ஒட்டிக் கொண்டு, சமுதாயத்திற்கு எந்த நன்மையும் செய்யாமல் ஜெயலலிதாவைப் புகழ்வது மட்டுமே குறிக்கோள் என்று செயல்பட்ட அவர்கள் தற்போது அதிமுகவின் கதவுகள் திறக்கப்படாத நிலையில் திமுகவின் பக்கம் தாவியுள்ளனர்.
ஊடகங்ளிலும் சமூக வலைத் தளங்களிலும் மமகவின் பச்சோந்தித் தனத்தை வறுத்தெடுக்கின்றனர்.
"இவ்வளவு நாளும் அதிமுகவை ஆதரித்து விட்டு, இந்த நான்கைந்து நாட்களுக்குள் திமுகவுக்கு மாறி விட்டீர்களே! இந்த இடைவெளியில் எந்த வகையில் அதிமுக உங்கள் கொள்கைகளுக்கு மாற்றமாக நடந்து விட்டது? திமுக உங்கள் கொள்கை எதனை ஏற்றுக் கொண்டுவிட்டது? அதிமுக கூட்டணி தான் எங்களை சிறப்பாக நடத்தியது என்று ஜவாஹிருல்லா சொல்லியிருக்கிறார். நீங்கள் தற்போது எடுத்திருக்கும் முடிவுக்குப் பின்னால் இருப்பது கட்சி நலனா? நாட்டு நலனா?
இஸ்லாமியர்களின் நலன் தான் முக்கியம் என்று நீங்கள் கருதினால், "திமுக, அதிமுக ரெண்டு கட்சிகளாலும் சமுதாயத்திற்குப் பெரிதாக எதுவும் நடக்கவில்லை, அதனால் இரண்டு கட்சிக்கும் ஆதரவில்லை'' என்று தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்திருக் கிறதே! அந்த முடிவையாவது நீங்கள் எடுத்திருக்க வேண்டும். கடைசிப் பத்து நாளில் இந்த மாற்றமெல்லாம் நடக்கிறது என்றால் வெறும் பதவி, தொகுதி, அதிகாரம் இது தான் உங்கள் குறிக்கோளா? அதிகாரம் உள்ள கட்சியோடு தான் நாங்கள் ஒட்டிக் கொண்டிருப்போம் என்று இதை எளிதாகச் சொல்லலாமே!'' என்று மமக நிர்வாகியைப் பார்த்து நியூஸ்-7 தொலைக்காட்சியின் நெறியாளர் கேட்கிறார். அதற்கு அந்த மமக நிர்வாகி, அது வந்து, அது வந்து, அதாவது என்று திணறுவதைப் பார்ப்பதற்கே பரிதாபமாக இருந்தது.
அதே நிகழ்ச்சியில் கம்யூனிஸ்ட் கட்சியின் கனகராஜ் அவர்கள், "கடலூருக்கு முதலமைச்சர் அறிவித்த நிவாரண உதவிகளை எல்லாம் கேட்ட பிறகு, எங்கள் ஊருக்கும் புயல் வந்திருந்தால் நன்றாக இருக்குமே என்று மக்கள் நினைக்கிறார்கள்' என்று ஜவாஹிருல்லா சொன்னார். இது அதீதமில்லையா? நிவாரண உதவிக்காக மக்கள் இப்படிச் சொல்கிறார்கள் என்று கூறலாமா? வெறும் தேர்தல் கூட்டணிக் காக ஒரு கட்சியின் தலைவர் இப்படிச் சொல்கிறார் எனும் போது உண்மையிலேயே மனது வேதனைப் படுகிறது'' என்று கேட்டார். இதற்கும் மேற்படி மமக நிர்வாகியால் எந்தப் பதிலையும் சொல்ல முடியவில்லை.
ஆக, பதவி ஒன்று தான் தங்களது குறிக்கோள் என்பதை பட்டவர்த் தனமாக அறிவித்து, அசிங்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த சமுதாயத் துரோகிகளின் நிலையைப் பார்க்கும் போது, மேலே நாம் எடுத்துக் காட்டியுள்ள 19:76 வசனத்தில் அல்லாஹ் கூறுவது போன்று, இந்த இழிவிலிருந்து நம்மைக் காப்பாற்றி நேர்வழியை அதிகப்படுத்தியுள்ள அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்!

தினமும் இரவில் தூங்கும் முன் அதிக நேரம்  ஸ்மார்ட் போன் பயன்படுத்தி விட்டு தூங்கும் பழக்கம் உள்ளதா?

தினமும் இரவில் தூங்கும் முன் அதிக நேரம்  ஸ்மார்ட் போன் பயன்படுத்தி விட்டு தூங்கும் பழக்கம் உள்ளதா?

இதனால் ஏற்படும் கண் சோர்வு மற்றும்  புற்றுநோயில்  இருந்து கண்களை பாதுகாக்க சில ஸ்மார்ட்
போன் அப்ளிகேஷன்ஸ் இலவசமாக கிடைக்கின்றன.  அவற்றில் ஒன்று Twilight ஆகும்.பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள். இதன் மூலம் இரவு நேர ஸ்மார்ட் போன் பயன்பாட்டால் கண் சோர்வு மற்றும் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கலாம்.

பின்வரும் இணைய பக்கத்தில் இருந்து செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Visit Download Page