அறிமுகம் இல்லாத உருது பேசுபவன் கிட்ட எதார்த்தமா பேசிகிட்டு இருக்கும் போது
ஜீ நீங்க முஸ்சல்மானானு கேட்டான்.!?
அப்படினா என்னனு நான் கேட்க
அவன்:- இல்ல ஜீ முஸ்லீமானு கேட்டேன்
நான்:- ஆமா ஏன் கேக்குறிங்க
அவன்:- இல்ல முஸ்லீமா இருந்துகிட்டு உருது பேச மாட்றிங்க.!!
நான்:- முஸ்லீமா இருந்தா உருது கட்டாயமா பேசனும்னு யார் சொன்னது.!?
அவன்:- பாரம்பரியமா முஸ்லீம்கள் உருது பேசிகிட்டு தான வராங்க.!!
நான்:- உருது மொழி தோன்றுவதற்கு முன்பே தமிழக பகுதியில் எங்கள் முன்னோர்கள் இஸ்லாத்தை ஏற்றுவிட்டார்கள் அதாவது முகலாயர்கள் வருகைக்கு முன்பே
இந்தியா முழுவதும் ஆட்சி செய்த முகலாயர்கள் தென் தமிழகம் மற்றும் மலபார் பகுதிகளில் ஆட்சி செய்ததில்லை இன்றும் இந்த பகுதியில் பெரும்பாலான முஸ்லீம்களுக்கு உருது என்றால் என்னவென்று தெரியாது அது போல் தான் நானும்.!
உருது என்பது முஸ்லீம்களின் மொழி இல்லை அது முகலாயர்களின் ரகசிய மொழியாக இருந்தது,
தமிழக முஸ்லீம்களின் முன்னோர்கள் முகலாயர்கள் கிடையாது.!! இன்று வட தமிழகத்தில் உருது பேசுபவர்கள் கூட முகலாயர்கள் காலத்தில் உருதை கற்ற தமிழர்கள் என்று எனக்கு தெரியுது ஆனால் உன்னை போன்றவர்களுக்கு இது தெரியாததால் தான் நம் நாட்டில்
முஸ்லீம்கள் என்றாலே உருது பேசுவார்கள் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என்றும் சிலர் நினைக்கிறார்கள் கூடவே துருக்கர்கள்(துளுக்கன்) என்று துருக்கி நாட்டவன் போல அன்னியபடுத்துகிறார்கள்
முஸ்லீம்கள் என்றாலும் மொழி வேறு என்பதால் தான் பாகிஸ்தானைவிட்டு
பங்களாதேஷ் பிரிந்தார்கள். அரபியர்களிடமும்,துருக்கியர்களிடமும் குர்துக்கள் பிரிந்து வாழ்கிறார்கள்,
பின் எப்படி உருது முஸ்லீம்களின் மொழி என்று சொல்லுறனு முடித்தேன்
அவன்:- கப்சிப்!!!!!!!!!!
சில முஸ்லீம் கிட்ட தமிழ் மொழி வெறி இருப்பது போல் உருது மொழி வெறி இருப்பதையும் உணர்ந்தேன்.!
Src:whatsapp
No comments:
Post a Comment